சனி, 24 ஜனவரி, 2026

பொன் ஊஞ்சல்

           பொன் ஊஞ்சல்

          அறியாத வயதில்
          நான் 
          ஏறி மிதித்து
          தொங்கி விளையாடிய
          என் 
          தந்தையின்  ேதாள்பட்டை...
        
      

வெள்ளி, 23 ஜனவரி, 2026

SIDDHAR PADALGAL

                          சித்தர் பாடல்கள் - 01

இங்கும் அங்குமாய் மனமே ஈடழிய  வேண்டாங்காண்

அங்கம்  பொருளா அறிந்து   கொண்டு- எங்கு ெமங்கும்

நாமே  சிவமாக நாடினால் ஞான மொழி

தாமே  அருளைத்  தரும்,

                                                   -பட்டினத்துச் சித்தா் ஞானம்-72

   பொருள்

             மனமே இங்கும் அங்குமாய் ஈடழிதல் வேண்டாம்,நம் உடலையே 

முதலீடாய்க் கொண்டு , எங்கெங்கும் நாமே சிவமாக இருப்பாதாய் 

உணா்ந்தால் இந்த ஞான மொழியே அருளைத் நமக்குத் தரும்,







ழ