இலக்கியத்தில் இன்சுவை அறம்
வாழ்வைச் செதுக்கும் உளிகளுள் ஒன்று இலக்கியம் எனில் அது மிகையாகாது. காரணம் உலகியல் அறிவாழம் , நடைமுறை அறம் , கற்பனை வளம் ,கவித்துவம் ,மெய்யியல் ஆகியவற்றை உள்ளடக்கி எக்காலத்தும் பொருந்தும் கருத்துக் களஞ்சியமாக திகழ்வதேயாம்.
வாழ்க்கை என்பது வெறும் தத்துவங்களால் ஆனது மட்டுமல்ல,
செல்வம் ,இல்லறம்,தோழமை,கல்வி,பெண்மை,வீரம்,புகழ் வறுமை,ஏமாற்றஙகள், உறவுகளின் சிக்கல்கள்,வாழ்வியல் முறைகள் என பல்வேறு தளங்களில் நகர்ந்து செல்லும் எதிா்பாா்ப்புகள் நிறைந்த பயணம். அப் பயணம் சீா்பட அமைய உதவுமென்ற நோக்கில் இலக்கியத்தில் இன்சுவை அறம் என்ற தொடா் வலைப் பக்கத்தில் வலம் வருகிறது.
வாசித்து விமா்சனம் பதிவிடுஙகள், வளா்வதற்கு,,,,!
இலக்கியத்தில் இன்சுவை அறம் - 01
துன்பத்தில் கை காெடுக்காதவை
1. உடன் பிறாவா தம்பி
2. பெற்றெடுக்காத தாய்
3. ஈன்றெடுக்காத தந்தை
4. மற்றவாிடமுள்ள வளம் பொருந்திய செல்வம்
5. வேற்று மனிதாிடமுள்ள பொருள்கள்
6. வேசிமேல் கொண்ட ஆசை
7. ஏட்டுச் சுரைக்காய் போன்று கற்றுத் தரும் கல்வி
8. மாற்றான் மனையாளுடன் வாழும் வாழ்க்கை
ஆகிய எட்டும் துன்பத்தில் கை கொடுக்காதவை.
தன்னுடன் பிறவாத் தம்பி தன்னைப் பெறாத் தாயாா் தந்தை
அன்னியரிடத்துச் செல்வ மரும்பொருள்வேசி யாசை
மன்னியவேட்டின் கல்வி மறுமனையாட்டி வாழ்க்கை
இன்னவாறங் கருமமெட்டு மிடுக்கத்துக் குதவான்றே .
விவேக சிந்தாமணி பாடல் - 17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக