தமிழும் அறிவியலும்
"அருள் பழுத்த பழஞ்சுவையே கரும்பே தேனே
ஆரமிர்தே என் கண்ணே அரியவான
பொருள் அனைத்தும் தரும் பொருளே ..."
- என்று இறைவனை அழைக்கும் பாடல் வரிகளின் சுவையை தான் சுவைத்தறிந்து கூறுவது தமிழ் . சோதனைகள் பல செய்து ஆய்வின் முடிவைச் சொல்வது அறிவியல் . இன்று விளக்கப் படும் அறிவியல் சார் கருத்துகள்
அன்று இலக்கியங்களில் விதைகப்படுள்ளன .
மந்திரமும் மாரடைப்பும் :
உயர் இரத்த அழுத்தத்தாலும் ,மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென நெஞ்சு வலிப்பத்தாக கூறி
அலறித்துடித்து உயிர் துறப்பர் . இதயத்திற்கு செல்ல வேண்டிய பிராண வாயு போதுமான அளவு செல்ல முடியாத நிலையில் இம்மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் இன்று பல ஆய்வுகள் மேற்கொண்டு கூறியுள்ளனர் . ஆனால்,மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் திருமந்திரத்தில்,
" அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரோடு மந்தணம் கொண்டார்
இடபக்க மேதுரை நொந்தது என்பர்
கிடக்கப் படுத்தாள் இயந்தொழிந் தாரே
(தமிழ் மந்திரம் -பா.எண் 42)
என்ற பாடல் வழி கூறப்பட்டுள்ளது .விரும்பிய பலகாரங்களைச் செய்து உண்டு இளைப்பாறி இரகசியமாக பல வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்த போது ......திடீரென்று தமக்கு இடப்பக்கம் சிறிது நோவுகிறது என்று கூறி படுக்கையில் படுத்தார்கள் . படுத்தபடியே இறந்தார் எனக் குறிப்பிடுகிறார் .இதில் 'இடப்பக்க நோவு' என்பது இன்று குறிப்பிடப்படும் மாரடைப்பையே (HEART ATTACK) உணர்த்துகிறது என்று அறியலாம் .
மேலும் நாளை வரும் ........